Wednesday, June 24, 2009

காந்தி ஜெயந்தி

மதுக் கடைகளை திறந்தால் அன்று
மன்னிப்பே கிடையாதாம் ...
அடியே ..
காந்தி ஜெயந்தி அன்று மட்டுமாவது -உன்
கண்களை மூடி வை!

Tuesday, June 23, 2009

எதிர் கட்சிகளுக்கு என்ன ஆச்சு ?

நண்பர்களே
வணக்கம்
முடிந்து போன பாராளுமன்ற தேர்தலோடு தங்களின் எதிர்காலமும் முடிந்து போய்விட்டதை போல் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒரு வித அரசியல் சோம்பேறி தனத்தில் ,இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல !
அடுத்த சில ஆண்டுகளில் வரும் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமை தான் இந்த மனசோர்வுக்கு காரணம்.
நம்பிக்கை அற்று போனதற்கு காரணம் இந்த முறை வெள்ளமென பாய்ந்த வெள்ளிபணம்.
இந்த அளவு செலவு செய்தால் தான் இனி வெற்றி பெற முடியும் என்று தீர்மானமாக நம்ம்பி விட்ட எதிர் கட்சிகள்.
ஆனால் ஜனநாயகம் அவ்வளவு எளிதாய் தோற்கும் என நான் நம்பவில்லை !
ஜனநாயகத்தில் எதிர் அணி பலவீனமாக இருப்பது ஜனங்களுக்கு நல்லதல்ல !இன்னும் சொல்லபோனால் அது ஆளும் கட்சிக்கே கூட நல்லதல்ல !
எனவே எதிர் கட்சிகள் தமது பொறுப்பை உணர்ந்து இனியாவது தூக்கம் களைந்து எழுந்து செயல்படலாமே !

நிலவெரியும் இரவு !

நிலவெரியும் இரவு
நேர்மேலே நட்சத்திரம்
உற்றுபார்க்கிறதா உன்னையும் ?
கனவெழுதி கரைந்துபோகும் ...
கன்னங்கள் கோடாகும்
நினைவிருக்கா உனக்கும் கூட ?
உன் இமைபிரியும் சத்தம் கூட
எழுப்பிவிடும் என்னை
என் உயிர்பிரியும் வலி கூடவா
உணரவில்லை உனக்கு ?
ஜீ

புன்னை நல்லூர் மாரியம்மன் புகழ் !

தங்க நிறத்தொரு பட்டுடுத்தி
தரணியெல்லாம் உந்தன் புகழ் பரப்பி
வாளொடு கரம்கொண்டு வருபவளே !-எம்மை
வாழ வைக்கும் எங்கள் குலமகளே!