Saturday, September 5, 2009

முகமழிந்து முள்வேலிக்குள் .....

வணக்கம் நண்பர்களே...ஆயிரம் ஆயிரம் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஆந்திர முதல்வர் இறந்தபோது அங்கிருந்த அரசியல்வாதிகள் ஒரே குரலில் அனுதாபமும் அதிர்ச்சியும் வெளியிட்டு அரசியல் தாண்டிய மனித மாண்பினை காட்டியது பாராட்டுக்குரியது .ஆனால் ஒரே இனத்தில் பிறந்து ஒரே மொழியை பேசிக்கொண்டு ,அந்த இனத்தில் பிறந்த ஒரே பாவத்திற்காய் முள்வேலிக்குள் முகமழிந்து, முகவரியற்று வாடுபவனை பற்றி இங்கு ஏன் எந்த பெரிய அரசியல்வாதியும் பேச மறுக்கிறார்கள் ?தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிக்க வேண்டாம் .ஆனால் தமிழ் இனமே தடை செய்யப்பட்ட இனமா என்ன ?
பேசவே தொடங்காத பச்சை மண் முதல் பேசவே முடியாத பட்ட மரம் வரை ஒரு மொழியின் பெயரால் முள்வேலிசிறைக்குள் சித்ரவதை படுத்த படுவது என்ன நியாயம் ?
உடுக்க மாற்று உடையின்றி ,இருக்க சரியான கூரையின்றி ,கழிவறை வசதி கூட இல்லாமல் அப்பாவி தமிழ் மக்கள் அவலப்படுவது எதற்காக ?
மிருகங்கள் மீது கூட பரிவு காட்டும் உலக சமுதாயம் ஏன் மௌனமாக வேடிக்கை பார்க்கிறது ?விலங்குகளை விடவா தமிழன் கேவலமாகி விட்டான் ?

Tuesday, July 21, 2009

புறக்கணிப்பு

வேண்டாம் என ஒதுங்கி போவதில் ஒரு இயலாமையின் சோகம் இழையோடுகிறது !பல ஆண்டு காலம் தொடர்ந்த தோல்விக்கு பின் கூட கலைஞர் துடிப்புடன் சவால்களை எதிர் கொண்டார் !அதுவே அவரது தற்போதைய வெற்றிகளுக்கு மூல காரணம் .மேடமும் கொஞ்சம் யோசித்து இந்த முடிவை மாற்றிக் கொள்வது அவருக்கும் தமிழகத்துக்கும் நல்லது .
எல்லா தேர்தலும் ஏதாவது ஒரு ஏமாற்று வேலையில் தான் வெற்றியை தந்திருக்கிறது !
அம்மாதிரி ஒரு மாற்று ஏமாற்று வேலையை கண்டறிவது மட்டும் தான் இப்போது அம்மாவுக்கு முக்கிய கடமை .புறக்கணிப்பு அல்ல .

Tuesday, July 7, 2009

புன்னை நல்லூர் மாரியம்மன் புகழ் !-2

சுந்தர வடிவுடை நாயகியே!

சுகந்தரும் தண்ணொளி விண்மதியே!

சந்தமும் கவிதையும் அளித்தவளே !

சங்கடமனைத்தையும் தவிர்ப்பவளே!

எல்லா வளமும் எனக்களிப்பாய்

எங்கும் நிறையருள் ஒளிச்சுடர்

நில்லாதுன்முன் துயரங்களே

நிம்மதி நிம்மதி தருபவளே!













Thursday, July 2, 2009

நிஜமே நிஜமாய்

நிஜமே நிஜமாய் நிஜத்தை தாக்கும்

கனவும் கனவில் கனவாய் போகும்

தேடலை தேட தேடலே வாழ்வாய்

முடியும் முடியா பாதையாய் முடியும்

நிஜமே நிஜமாய்

நிஜமே நிஜமாய் நிஜத்தை தாக்கும்

Wednesday, June 24, 2009

காந்தி ஜெயந்தி

மதுக் கடைகளை திறந்தால் அன்று
மன்னிப்பே கிடையாதாம் ...
அடியே ..
காந்தி ஜெயந்தி அன்று மட்டுமாவது -உன்
கண்களை மூடி வை!

Tuesday, June 23, 2009

எதிர் கட்சிகளுக்கு என்ன ஆச்சு ?

நண்பர்களே
வணக்கம்
முடிந்து போன பாராளுமன்ற தேர்தலோடு தங்களின் எதிர்காலமும் முடிந்து போய்விட்டதை போல் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒரு வித அரசியல் சோம்பேறி தனத்தில் ,இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல !
அடுத்த சில ஆண்டுகளில் வரும் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமை தான் இந்த மனசோர்வுக்கு காரணம்.
நம்பிக்கை அற்று போனதற்கு காரணம் இந்த முறை வெள்ளமென பாய்ந்த வெள்ளிபணம்.
இந்த அளவு செலவு செய்தால் தான் இனி வெற்றி பெற முடியும் என்று தீர்மானமாக நம்ம்பி விட்ட எதிர் கட்சிகள்.
ஆனால் ஜனநாயகம் அவ்வளவு எளிதாய் தோற்கும் என நான் நம்பவில்லை !
ஜனநாயகத்தில் எதிர் அணி பலவீனமாக இருப்பது ஜனங்களுக்கு நல்லதல்ல !இன்னும் சொல்லபோனால் அது ஆளும் கட்சிக்கே கூட நல்லதல்ல !
எனவே எதிர் கட்சிகள் தமது பொறுப்பை உணர்ந்து இனியாவது தூக்கம் களைந்து எழுந்து செயல்படலாமே !

நிலவெரியும் இரவு !

நிலவெரியும் இரவு
நேர்மேலே நட்சத்திரம்
உற்றுபார்க்கிறதா உன்னையும் ?
கனவெழுதி கரைந்துபோகும் ...
கன்னங்கள் கோடாகும்
நினைவிருக்கா உனக்கும் கூட ?
உன் இமைபிரியும் சத்தம் கூட
எழுப்பிவிடும் என்னை
என் உயிர்பிரியும் வலி கூடவா
உணரவில்லை உனக்கு ?
ஜீ

புன்னை நல்லூர் மாரியம்மன் புகழ் !

தங்க நிறத்தொரு பட்டுடுத்தி
தரணியெல்லாம் உந்தன் புகழ் பரப்பி
வாளொடு கரம்கொண்டு வருபவளே !-எம்மை
வாழ வைக்கும் எங்கள் குலமகளே!

Thursday, April 16, 2009

vaalthukal

Pongu Thamilarkku Innal Vilaithaal Sangaram Nijamendru Sankea Mulangu! Sithirai Muthal Naal Vaazthukal!-

Sunday, March 8, 2009

PUNNAINALLUR MARIYAMMAN PUGAL

THANGA NIRATHORU PATTUDITHI

THARANIYELLAM UNTHAN PUGAL PARAPPI

VALODU KARAM KONDU VARUPAVALEA!-EMMAI

VAALA VAIKUM ENGAL KULAMAGALEA!