Tuesday, July 21, 2009

புறக்கணிப்பு

வேண்டாம் என ஒதுங்கி போவதில் ஒரு இயலாமையின் சோகம் இழையோடுகிறது !பல ஆண்டு காலம் தொடர்ந்த தோல்விக்கு பின் கூட கலைஞர் துடிப்புடன் சவால்களை எதிர் கொண்டார் !அதுவே அவரது தற்போதைய வெற்றிகளுக்கு மூல காரணம் .மேடமும் கொஞ்சம் யோசித்து இந்த முடிவை மாற்றிக் கொள்வது அவருக்கும் தமிழகத்துக்கும் நல்லது .
எல்லா தேர்தலும் ஏதாவது ஒரு ஏமாற்று வேலையில் தான் வெற்றியை தந்திருக்கிறது !
அம்மாதிரி ஒரு மாற்று ஏமாற்று வேலையை கண்டறிவது மட்டும் தான் இப்போது அம்மாவுக்கு முக்கிய கடமை .புறக்கணிப்பு அல்ல .

Tuesday, July 7, 2009

புன்னை நல்லூர் மாரியம்மன் புகழ் !-2

சுந்தர வடிவுடை நாயகியே!

சுகந்தரும் தண்ணொளி விண்மதியே!

சந்தமும் கவிதையும் அளித்தவளே !

சங்கடமனைத்தையும் தவிர்ப்பவளே!

எல்லா வளமும் எனக்களிப்பாய்

எங்கும் நிறையருள் ஒளிச்சுடர்

நில்லாதுன்முன் துயரங்களே

நிம்மதி நிம்மதி தருபவளே!













Thursday, July 2, 2009

நிஜமே நிஜமாய்

நிஜமே நிஜமாய் நிஜத்தை தாக்கும்

கனவும் கனவில் கனவாய் போகும்

தேடலை தேட தேடலே வாழ்வாய்

முடியும் முடியா பாதையாய் முடியும்

நிஜமே நிஜமாய்

நிஜமே நிஜமாய் நிஜத்தை தாக்கும்

Wednesday, June 24, 2009

காந்தி ஜெயந்தி

மதுக் கடைகளை திறந்தால் அன்று
மன்னிப்பே கிடையாதாம் ...
அடியே ..
காந்தி ஜெயந்தி அன்று மட்டுமாவது -உன்
கண்களை மூடி வை!

Tuesday, June 23, 2009

எதிர் கட்சிகளுக்கு என்ன ஆச்சு ?

நண்பர்களே
வணக்கம்
முடிந்து போன பாராளுமன்ற தேர்தலோடு தங்களின் எதிர்காலமும் முடிந்து போய்விட்டதை போல் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒரு வித அரசியல் சோம்பேறி தனத்தில் ,இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல !
அடுத்த சில ஆண்டுகளில் வரும் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமை தான் இந்த மனசோர்வுக்கு காரணம்.
நம்பிக்கை அற்று போனதற்கு காரணம் இந்த முறை வெள்ளமென பாய்ந்த வெள்ளிபணம்.
இந்த அளவு செலவு செய்தால் தான் இனி வெற்றி பெற முடியும் என்று தீர்மானமாக நம்ம்பி விட்ட எதிர் கட்சிகள்.
ஆனால் ஜனநாயகம் அவ்வளவு எளிதாய் தோற்கும் என நான் நம்பவில்லை !
ஜனநாயகத்தில் எதிர் அணி பலவீனமாக இருப்பது ஜனங்களுக்கு நல்லதல்ல !இன்னும் சொல்லபோனால் அது ஆளும் கட்சிக்கே கூட நல்லதல்ல !
எனவே எதிர் கட்சிகள் தமது பொறுப்பை உணர்ந்து இனியாவது தூக்கம் களைந்து எழுந்து செயல்படலாமே !

நிலவெரியும் இரவு !

நிலவெரியும் இரவு
நேர்மேலே நட்சத்திரம்
உற்றுபார்க்கிறதா உன்னையும் ?
கனவெழுதி கரைந்துபோகும் ...
கன்னங்கள் கோடாகும்
நினைவிருக்கா உனக்கும் கூட ?
உன் இமைபிரியும் சத்தம் கூட
எழுப்பிவிடும் என்னை
என் உயிர்பிரியும் வலி கூடவா
உணரவில்லை உனக்கு ?